சிக்கப்போகும் மைத்திரி - கோட்டா! சிஐடி தரப்பால் கசிந்த இரகசியம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் கடத்த சம்பவமொன்று தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு பின்னர், மக்களின் நிலைப்பாடுகள் மற்றும் பொதுத் தளங்களில் பரப்பப்படும் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானித்துள்ளது.
இதன்மூலம், சட்டரீதியான கைதுகள் இடம்பெறும் போது பொதுமக்கள் அதற்கு இடம் கொடுக்கின்றார்கள் என்ற விடயம் புலனாய்வுத் தகவலாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
அதனால், இனிவரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதிகள் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



