ரணிலின் கைது தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்பு.. முன்வைக்கப்படும் கருத்து
ரணில் விக்ரமசிங்க இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்ட விடயமானது ஒரு தனிப்பட்ட ரீதியான அரசியல் முன்னெடுப்பு என மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஊடக மையத்தில் நேற்று (24) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் ரணிலின் கைதானது சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது அடிப்படையில் இந்த கைது ஏற்கக் கூடியதாக இருக்கிறது. அவரது கைது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் தொடர்புபட்டது. காரணம் எல்லோருக்கும் தெரியும்.
ஷானி அபேசேகர
அண்மையில் பேசப்பட்ட படலந்தை வதைமுகாம் தொடர்பான விடயம். இந்த ஆட்சியாளர்கள் இந்த கைதுகளை மேற்கொண்டு இருப்பது ஒரு தனிப்பட்ட ரீதியான முன்னெடுப்பு என்ற கேள்வியும் இருக்கின்றது. காரணம் படலந்தை வதை முகாமில் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது ஜேவிபினர். அவர்களின் கட்சியினர்.
அவர்களின் அமைப்பின் தலைவர்கள் ஆவர். இந்த கைது உத்தரவினை பிறப்பித்திருந்தவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் என்று கூறப்படுபவர் சானி அபிசேகரவை கடந்த 2015ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்தவர் இந்த ரணில் விக்ரமசிங்க தான். அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷானி அபேசேகர இந்த ஆட்சியாளர்களால் தற்போது பதவிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
ஆனால் அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்றும் கூறப்படுகிறது. கடந்த கால நல்லாட்சியில் ஊழல்களை கண்டுபிடித்து நிரூபிக்க வந்ததன் காரணமாக பிரதமராக இருந்த ரணில் அவரை பதவியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகின்றது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க இப்போது ஒரு சிறிய விடயம் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். பெரிய படுகொலைகளை செய்தவர்கள் ஊழல்கள் செய்தவர்கள் பெரிய குற்றங்களை இழைத்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள்.
அவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட வேண்டும். சரியான நீதியான உள்ளக பொறிமுறை ஊடாக இவ் விசாரணைகள் இடம்பெற வேண்டும். ஆனாலும் தமிழர்களுடைய விடயத்தில் உள்ளகமுறை விசாரணை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. சர்வதேச பொறிமுறை தான் வேண்டும் என்பது இந்த இடத்தில் நாங்க வலியுறுத்தி கூறிக்கொள்ள விரும்புகின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



