ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டுள்ள முக்கிய அறிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு தமிழ் கட்சிகளிடம் இருந்து அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், "பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பும் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் நடாத்தப்பட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
தமிழ் மக்கள் தொன்று தொட்டு பெரும்பான்மையாக வாழும் அவர்களின் வரலாற்றுப் பூர்வமான வாழிடங்களில், பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலம் அந்த மண்ணுக்கு உரித்தான தமிழ் மக்களை அங்கிருந்து விரட்டி, அவர்களை தமது சொந்த இடத்திலேயே சிறுபான்மையினராக்கி, அவர்களின் தனித்துவத்தை இல்லாது ஒழிப்பதுடன் மிகுதியாக இருப்போரை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் கரைந்து போகச் செய்தல்.
மனித உரிமை மீறல்கள்
உலகத்தில் மிகவும் செழுமை மிக்க தமிழ் மொழியைப் பேசும் தமிழ் மக்கள் மீது சிங்கள மொழியைத் திணித்து அவர்களது மொழி, கலாசாரம், பண்பாடுகளை அழித்தல்.
தமிழர்கள் மீது தொடர்ச்சியான படுகொலைகளை நிகழ்த்தி அவர்கள் நீண்ட நெடிய காலமாக சேகரித்த சொத்துகளை அழித்து அவர்களை அகதிகளாக்கி இந்த நாட்டை விட்டே துரத்துதல் கிடைத்தற்கரிய பல்லாயிரம் புத்தகங்கள், கையெழுத்து பிரதிகள், அரும்பெரும் பொக்கிசமாக விளங்கிய தமிழ் மருத்துவக் குறிப்புகள், மற்றும் இந்த மண்ணில் தமிழ் மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள் போன்றவற்றை பாதுகாத்து வைத்திருந்த நூல்நிலையத்தை அரச ஆதரவுடன் தீயிட்டுக் கொளுத்தி அவர்களின் வரலாற்றையே அழிக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்களுக்கு செம்மணி போன்று அளிக்கப்பட்ட அநீதி மற்றும் கொடுமைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



