கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சுமார் 30 படுகொலைச் சம்பவங்கள் பதிவு
கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சுமார் 30 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த படுகொலைகள் அனைத்தும் பாதாள உலகக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழப்பு
உயிரிழந்த 30 பேரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாத இறுதி முதல் இதுவரையில் இந்த படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழு முரண்பாடுகள் காரணமாக இந்த படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தென் மற்றும் மேல் மாகாணங்களில் அதிகளவில் கொலைகள்
தென் மற்றும் மேல் மாகாணங்களில் அதிகளவில் பாதாள உலகக் குழு கொலைகள் இடம்பெற்றுள்ளன.
தென் மாகாணத்தில் மட்டும் சுமார் 13 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஹரக் கட்டா, பாணந்துரே சலிந்து ஆகியோர் தலைமையிலான குழுக்களும், வாழைத்தோட்டம், முகத்துவாரம் மற்றும் பெஹலியகொட போன்ற பிரதேசங்களில் இயங்கி வரும் குழுக்களும் இந்த தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
