பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மீது தாக்குதல்
புத்தளம் - ஆனமடுவ, கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் தாக்கப்பட்டுள்ளனர்.
மூவர் வைத்தியசாலையில்
இந்த நிலையில் புத்தளம் பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மூவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே, பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் தெரியாத குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பொலிஸார் மீது தாக்குதல்
கொட்டுக்கச்சி, பூரணாகம பகுதியில் வீதியை மறித்து இரும்பு மற்றும் மரக் கம்பிகளால் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பல பொலிஸ் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
