திருகோணமலையில் கனரக வாகனங்களுடன் மூவர் கைது!
திருகோணமலை- கந்தளாய் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று ((25.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று(24.9.2026) மாலை இடம்பெற்ற இந்தச் சோதன நடவடிக்கைகளின்போது, கந்தளாய் - அக்போபுர பொலிஸாரினால் இரண்டு கனரக வாகனங்களும், கந்தளாய் - சூரியபுர பொலிஸாரினால் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மகாவலி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, அக்போபுர மற்றும் சூரியபுர பொலிஸாரினால் குறித்த வாகனங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சாரதிகளும் கந்தளாய் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர மற்றும் சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.