அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட பிளவு.. அமைச்சர் பிமல் வெளியிட்ட பகிரங்க தகவல்
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் இறுதி நாளான இன்று (25) அவர் இதனை குறிப்பிட்டார்.
22வது திருத்தச் சட்டம்
இது குறித்து விளக்கமளித்த அமைச்சர், "ஒரு அரசாங்கமாக, இதுவரை நாங்கள் பிளவுபட்ட நிலையில் செயல்படவில்லை.

இந்த குறிப்பிட்ட விவகாரம் ஒரு சிறிய பிளவை ஏற்படுத்தியது என்பதை நாங்கள் அறிவோம்; அது குறித்து எங்களுக்கு முழுமையான விழிப்புணர்வும் உள்ளது. எங்களுக்கென சில கணக்கீடுகள் உள்ளன.
இருப்பினும், நீங்கள் இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயன்றீர்கள்; அவ்வாறு செய்யும்போது, உண்மையில் அப்படி எதுவும் நடக்காத நிலையில், ஏதோ ஒன்று செய்யப்படாமல் விடப்பட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கவும் நீங்கள் முயற்சித்தீர்கள்." என எதிர்க்கட்சிகளை நோக்கி கூறினார்.
YOU MAY LIKE THIS..