யாழில் விசேட தேவையுடைய யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது
யாழில் விசேட தேவையுடைய 18 வயது யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் அவரின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு உடல் நிலை சரியில்லாததன் காரணமாக கடந்த 14ஆம் திகதி அவருடைய தாய் அவரைப் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார். பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடைய சகோதரியின் கணவரும் (சிறிய தந்தை) இன்னும் இருவரும் இணைந்து, அந்த யுவதியைத் தொடர்ச்சியாக தகாத முறைக்கு உட்படுத்தி வந்தனர் என்று பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் சிறிய தந்தையான 46 வயதுடைய நபரையும், 28 வயதுடைய மற்றைய இருவரையும் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri