கொழும்பில் விபத்தால் உயிரிழந்த நபர் - தப்பிச் சென்ற சந்தேக நபர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி மோதி படுகாயமடைந்த பாதசாரி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீதியில் விட்டுச் சென்று அவரது மரணத்திற்கு காரணமான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளையை சேர்ந்த 59 வயதுடையவராகும்.
சந்தேக நபர்கள் கைது
சந்தேக நபர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கந்தானை பகுதியில் வீதியில் பயணித்த நபர் முச்சக்கர வண்டியில் மோதி படுகாயமடைந்தார்.
3 சந்தேக நபர்களும் பாதசாரியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
பொலிஸாருக்கு தகவல்
இந்நிலையில் வீதியில் நபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக பேலியகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
