இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா! பீற்றர் இளஞ்செழியன் கேள்வி(Photos)
முல்லைத்தீவு-தண்ணிமுறிப்பு குள பகுதியில் இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மணல் அகழ்வு சம்பவமானது நேற்று (05.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் , நானும் அவ்விடத்திற்கு கள விஜயம் செய்த போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதனை அவதானித்திருந்தோம்.
தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலை பகுதியில் காவல் கடமையில் நிற்கும் இரு பொலிஸார் குறித்த மண் அகழ்வினை வேடிக்கை பார்த்து நின்றனர்.
இராணுவத்திற்கு ஒரு சட்டமும், மக்களுக்கு இன்னொரு சட்டமுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை பொலிஸாரும்
சட்டவிரோத மண் அகழ்விற்கு உடந்தையாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
