நுவரெலியாவில் 25 குடும்பங்களின் அவலநிலை
டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களாக அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், டிட்வா புயல் தாக்கி எங்கள் தோட்டத்தின் ஒரு பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிறகு, சுமார் ஒரு மாதமாக பொது இடங்களிலும், தோட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வசித்து வந்தோம்.
கோரிக்கை
பின்னர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 25 குடும்பங்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தற்காலிக கூடாரங்களைத் தயாரித்து தங்க வைத்துள்ளனர்.

எனினும் தற்போது இடைக்கிடையே மழை பெய்து வருகிறது.அத்துடன் அதிக காற்று வீசும் போதும் கூடாரங்களில் தொடர்ந்து தங்குவது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் புதிய வீடுகளை கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர் அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.




முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri