யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சிசுவின் கருச்சிதைவு மீட்பு!
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார்.
கருவை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணிப்பு
அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் , எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற யாழ்.நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன்,கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் , கருவை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு



கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan