டித்வா சூறாவளியால் அவதிப்படும் 25 குடும்பங்கள் - ஜனாதிபதி அவசர நடவடிக்கை

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government Cyclone Ditwah
By Thirumal May 14, 2026 11:12 AM GMT
Report

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட கவனத்திற்கு உட்பட்டுள்ள கொத்மலை வெவண்டன் தோட்டத்தில் டித்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட 25 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயத்தால் தங்களது வீடுகளை இழந்த இந்த குடும்பங்கள் ஆரம்பத்தில் பொதுமக்கள் தங்கும் இடங்களிலும் தோட்டக் கோவிலிலும் தங்கியிருந்த நிலையில், பின்னர் அரசாங்கம் ஏற்பாடு செய்த தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அநுர ஆட்சியில் தொடரும் நிதி மோசடி..! இம்ரான் எம்.பி வலியுறுத்தல்

அநுர ஆட்சியில் தொடரும் நிதி மோசடி..! இம்ரான் எம்.பி வலியுறுத்தல்

25 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு

எனினும், மழைக்காலம் மற்றும் பலத்த காற்று வீசும் நாட்களில் அந்த கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமானதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து வழங்கவோ அல்லது பாதுகாப்பான இடமொன்றில் மீளக் குடியமர்த்தவோ அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டித்வா சூறாவளியால் அவதிப்படும் 25 குடும்பங்கள் - ஜனாதிபதி அவசர நடவடிக்கை | 25 Families Affected By Cyclone Ditwah

இந்த குடும்பங்களுக்காக அதே தோட்டப்பகுதியில் வீடுகள் அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகள் சென்றிருந்த போதிலும், அந்த நிலப்பகுதியும் மண்சரிவு அபாயம் கொண்டதாக அடையாளம் காணப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டித்வா சூறாவளிக்குப் பின்னர் மண்சரிவு அபாயம் காரணமாக வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்போது கொத்மலை தொண்டமான் கலாசார மண்டபத்தில் தற்காலிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

தங்களது தோட்டப் பகுதியில் புதிய பாடசாலை ஒன்றையும் அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, (13) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கொத்மலை பிரதேச செயலாளர் நதீர லக்மால் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

டித்வா சூறாவளியால் அவதிப்படும் 25 குடும்பங்கள் - ஜனாதிபதி அவசர நடவடிக்கை | 25 Families Affected By Cyclone Ditwah

இதன்போது, அந்தப் பகுதி கடும் மண்சரிவு அபாயம் கொண்டிருப்பதால் அங்கு நிரந்தர வீடுகள் அமைப்பது சாத்தியமற்றது என பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொருத்தமான காணி ஒன்றை அடையாளம் கண்டு, நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகள் உடனடியாக அமைத்து வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் கொத்மலை பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.   

உலகில் எந்த நாடும் கொடுக்காத விலையை கொடுத்த இலங்கை! பல மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது..

உலகில் எந்த நாடும் கொடுக்காத விலையை கொடுத்த இலங்கை! பல மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது..

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை பிரஜை கைது..! இன்னும் இருவருக்கு நேர்ந்த கதி

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை பிரஜை கைது..! இன்னும் இருவருக்கு நேர்ந்த கதி

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை



மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US