மட்டக்களப்பில் உணவகக் கடைத் தொகுதியில் திடீர் தீ விபத்து! பல கடைகள் எரிந்து சாம்பல்
மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று(1) புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவலில் பல உணவகங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரெனப் பற்றிய தீ, அடுத்தடுத்துள்ள ஏனைய கடைகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.
தீ விபத்து
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படைப் பிரிவினருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், அதற்குள் பல உணவகங்கள் தீக்கிரையாகிப் பெரும் சேதமடைந்துள்ளன.
இந்தத் தீப்பரவலானது மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam