பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று காலை (14) 12 மாவட்டங்களில் உள்ள 55 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவற்றில், மூன்று மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை அம்பர் எச்சரிக்கையும், 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 1 ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலச்சரிவு எச்சரிக்கை
அதன்படி, காலி மாவட்டத்தில் உள்ள நெலுவா, களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹொரானா, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட, மத்துகம.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, ஹாலிஎல, மற்றும் பசறை, நியாகம, தவலம காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, புலத்சிங்கள
களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, தும்பனை, பஸ்பகே கோரள, டோலுவ, யட்டிநுவர, உடபலாத, கங்கைஹல கோரால பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, உடுநுவர, பூஜாபிட்டிய, கங்காவட கோரள, பாதஹேவஹெட்ட, ஹதரலியத்த, டெல்தோட்டை மற்றும் பன்வில, அரநாயக்க, மாவத்துபொல, புளத்சிங்கள, ரம்புக்கன, கேகாலை, யட்டியந்தோட்டை மற்றும் வரக்காபொல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் ரிடிகம, மாத்தளை மாவட்டத்தின் நௌலா, அம்பங்கங்க கோரலா மற்றும் ரத்தோட்டா
மாத்தறை மாவட்டத்தின் பிதாபெத்தறை, மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய, பிபில மற்றும் பாதல்கும்புர
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வுட், கொத்மலை மற்றும் அம்பகமுவ
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயார்நிலை
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான,அயகம, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகிய பகுதிகளுக்கும் நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலை இரண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், நிலை ஒன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மழை பெய்தால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam