திருச்சி சிறப்பு முகாமில் 24 நாளாக தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டம் (Photos)
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் 24 வது நாளாகத் தொடர்ந்து தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 20/05/2022 தொடக்கம் உணவேதும் உட்கொள்ளாது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஈழத்தமிழ் அகதிகள் பதினேழுபேரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடல் நிலை மோசமடைந்து விடும் என்ற ஆலோசனையின் பேரில் கடந்த 10/06/2022 அன்றிலிருந்து தற்காலிகமாக தமது போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.
தொடரும் உண்ணாவிரத போராட்டம்
இந்நிலையில் 10/06/2022 இலிருந்து மேலும் நால்வர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்திருந்த நிலையில் நேற்றிலிருந்து மேலும் மூவர் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஏழுபேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதேவேளை கடந்த 20/05/2022 இலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஏனைய 16 பேரும் திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்க வைக்கப்பட்ட 104 ஈழத்தமிழ் உறவுகளை விடுவிப்பதற்காகத் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என் அவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.