திருச்சி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் (PHOTOS)
திருச்சி தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய கோரி நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 17 இலங்கை தமிழர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் போராட்டம்
இந்திய தமிழ் நாடு திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 17 நாட்களாக தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என நீரை மட்டும் அருந்தி 17 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திருச்சி முகாமில் 17 ஆவது நாளாக தொடரும் இலங்கை தமிழர்களின் போராட்டம்(Video) |
மேலும், இன்று காலை குறித்த தடுப்பு முகாமில் உள்ள 104 ஈழ தமிழ் அகதிகளும் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணை கொலை செய்யுங்கள் எனவும் தமது உடல் உறுப்புக்களை தமிழ் நாட்டு உறவுகளுக்கு தானம் வழங்குவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.






பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
