திருச்சி முகாமில் 17 ஆவது நாளாக தொடரும் இலங்கை தமிழர்களின் போராட்டம்(Video)
திருச்சி தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி இன்று 17 ஆவது நாளாக நீரை மட்டும் அருந்தி
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இலங்கை தமிழர்களின் போராட்டம்
இந்நிலையில் இன்றைய தினம் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கக்கூடிய 104 இலங்கை தமிழர்களும், தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக் கொலை
செய்யுங்கள் என்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை
முன்னெடுத்துள்ளார்கள்.
குறிப்பாக நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற போராட்டக்காரர்கள் தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி தங்களுடைய உடல் உறுப்புகளை தமிழ்நாட்டு மக்களுக்கு தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அதிகாரிகளின் கவனயீனம்
இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் தங்களுடைய போராட்டம் தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை என்றும், இதனால் போராட்டகாரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட அதிகாரிகள் அக்கறை
எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
