மக்கள் மனதில் நம்பிக்கையை வலுப்படுத்தும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம்..
நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், விவாதம் இன்றும் தொடரப்பட்டது.
அவர் மேலும், “இன்று இலங்கையின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கக்கூடிய முக்கியமான தினமாகும். நாட்டில் சட்டம் இருந்தபோதிலும், அது அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகின்றது.
அரசியலமைப்பில் மாற்றங்கள்..
நீதிமன்றங்கள் இருந்தாலும், அந்த நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்ததா என்பதும் கேள்விக்குறியாகவே காணப்பட்டது. இந்த நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வெறுமனே அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு சட்டமூலம் அல்ல.

இது நாட்டின் சட்டம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட முக்கியமான விடயமாகும். நாட்டில் நீதியை நிலைநாட்டுதல், நீதியான தேசத்தை உருவாக்குதல் மற்றும் அனைவருக்கும் சமமான முறையில் நீதியைப் பெற்றுக்கொடுத்தல் என்பனவே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களாகும்.
ஒரு நாட்டின் வலிமை அதன் ஆயுதங்களிலோ, கட்டடங்களிலோ அல்லது பொருளாதாரத்திலோ மாத்திரம் தங்கியிருக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்படும்போதே அந்த நாட்டின் ஜனநாயகம் வலுப்பெறும்.
நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக தமிழ் மக்களின் மத்தியில் நீதித்துறை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் சந்தேகங்களையும் நம்பிக்கையின்மையையும் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது” என்றார்.
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை!இறுதி ஈழப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது....
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan