சிரியாவின் தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு! 22 பேர் பலி
சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்
இந்த சம்பவம் நேற்று மாலை குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கிரேக்க ஒர்த்தடொக்ஸ் தேவாலயத்துக்குள் சென்ற ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிக்கும் அங்கியை வெடிக்கச் செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது எனவும் அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமை கோரலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
