யாழில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு - காங்கேசன்துறை பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை அவர்களை நேற்று (09.03.2024) இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணை
நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் மொத்தமாக 22 இந்திய கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
