2025 வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் சுமார் 40 சதவீதமானவை குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PublicFinance.lk தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில், தலா 500 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான ஒதுக்கீட்டைக் கொண்ட 36 முக்கிய திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களுக்காக மொத்தம் 212.25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆய்வின்படி, 33 சதவீத வாக்குறுதிகள் முழுமையாகவும், 8 சதவீதம் கணிசமான அளவிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டம்
22 சதவீதம் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 14 சதவீதம் குறைந்த முன்னேற்றத்தையும், 3 சதவீதம் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 19 சதவீத திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக எந்தவொரு திட்டமும் முழுமையாகத் தகவல் மூடப்பட்ட நிலையில் இருக்கவில்லை.
இந்த நிலையில், இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை (12.11.2026) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.