பெப்ரவரி மாதத்திற்கு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்! ரணிலின் வரலாற்று தீர்மானங்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் வரலாற்று தீர்மானங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க அரசியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு அமையவே செயற்பட்டு, ஆராய்ச்சிகளுக்கு அமையவே அவர் வரலாறு முழுவதும் தீர்மானங்களை எடுத்துள்ளார்.
எனவே,பெப்ரவரி மாத முற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் அறிகுறி தென்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |