சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சி
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சி ஒரு தீர்க்கமான முடிவெடுத்துள்ளது என அக்கட்சியின் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது.
இருப்பினும், பல்வேறு சலுகைகளுக்காக தமிழரசு கட்சியினை சார்ந்தவர்கள், குறித்த தீர்மானத்தை இளிவுபடுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில், தந்தை செல்வாவின் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் தமிழரசு கட்சியின் இந்த தீர்மானம் தீர்க்கமானதாகவே அமையும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |