தமிழர் தேசம் சர்வதேசத்திற்கு வழங்கவுள்ள செய்தி: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் கோரிக்கை
தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி வழங்கப்படவேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்யைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''சிறிலங்காவின் 9வது சனாதிபதி தேர்தல் தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு அன்பிற்குரிய தமிழ் மக்களே!
இம்மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் சனாதிபதி தேர்தலானது தமிழர் தேசத்திக்குரிய தேர்தல் அன்று.
இனவாத கோட்பாடு
அது சிங்கள பேரினவாதம் தமது நாட்டிக்குரிய தமது அதிபரை தேர்வு செய்யும் தேர்தலாகும்.
தற்போது போட்டியிடும் வேட்பாளர்களுள் எவர் சிறப்பாக இனவாத கோட்பாட்டினை முன்னெடுத்துச் செல்வார் என சிங்கள தேசம் தெரிவு செய்யும் தேர்தலே ஆகும்.
இந்த தேர்தலில் தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் எவ்விதத்திலும் கணக்கில் கொள்ளப்படப் போவதில்லை.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியலில் எவ்விதமான நன்மைகளையும் இத்தேர்தல் வழங்கப் போவதில்லை.
ஆயினும் இந்த தேர்தலானது தமிழர் தேசம் மீது இன்று திணிக்கப்பட்டுள்ளது. தமிழர் மீது திடீர் பாசம் கொண்ட சிங்கள வேடதாரிகள் எமது தேசம் எங்கும் இன்முகத்துடன் வலம்வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.
இதில் தமிழராகிய நாம் எந்த சிங்கள
வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியாது. தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும்
சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள
ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியினை வெளி உலகிற்கு
வெளிப்படுத்த வேண்டும்" என்றுள்ளது.