இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு: கைசாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்
இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கைத் தொழிலாளர்கள் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று (17 ) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர், "இஸ்ரேலில் உள்ள ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள் ஆண்,பெண் இருபாலருக்கும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்காக விண்ணப்பிப்பவர்கள் NVQ மட்டம் 3 தரச்சான்றிதழ் பேற்றுக்கு வேண்டும்.
வேலைக்கு ஆட்சேர்ப்பு
இந்த வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
இதற்கிடையில், இஸ்ரேலில் கைத்தொழில் துறையில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, எதிர்காலத்தில் நிர்மாணத்துறையில் தொழிலாளர்களை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அங்கமாக கடந்தவாரம் இரண்டு குழுக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் விவசாயத்துறையில் இதுவரை இரண்டாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். இவ்வேலைவாய்ப்புக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் எந்தவொரு இடைத்தரகரிடமும் பணம் செலுத்த வேண்டிய அவசியமுமில்லை. அவ்வாறு பணம் பெறும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும்" என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
