சிந்தித்து வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்துமாறு மன்னார் பிரஜைகள் குழு கோரிக்கை

Election Sri Lanka Presidential Election 2024
By Ashik Sep 18, 2024 03:05 PM GMT
Report

தூய்மையான, அமைதியான அரசியல் நாட்டில் நடைபெற வேண்டும். எம் மக்கள் அமைதியுடனும், சம உரிமைகளுடன் வாழ வேண்டும். அடிப்படை தேவைகள் அனைத்து மக்களுக்கு கிடைக்க வேண்டும்.

நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும், அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சிறந்த தலைவரை உருவாக்க சிந்தித்து சிறந்த தெளிவுடன் வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை (18) அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

சார்ல்ஸின் வீட்டுக்கு ஜனாதிபதி சென்றதில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்

சார்ல்ஸின் வீட்டுக்கு ஜனாதிபதி சென்றதில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்

 

சிந்தித்து வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்துமாறு மன்னார் பிரஜைகள் குழு கோரிக்கை | People Mannar The Group Has Requested The Public

இலங்கை நாட்டின் குடிமக்களாகிய நாம் இப்பொழுது எமது நாட்டிற்கு பொருத்தமான தலைவரை தெரிவு செய்யும் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு எண்ணங்களோடும், எதிர்பார்புகளோடும், சுமைகளோடும், வேதனையோடும், இத்தேர்தலை சந்திக்கின்றோம்.

எங்களுடைய வேதனைகள், எங்களுடைய சுமைகள் எங்களுடைய அடிமைத்தனங்கள் எங்களுடைய எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அற்ற சூழல் நிலைகளுடன் எமது வாழ்விடம் எப்போது இல்லாமல் போகும் என்ற ஏக்கத்தோடும், பெரு மூச்சோடும், பயத்தோடும் வாழும் நாம் இன்று இத்தேர்தலை சந்திக்கின்றோம்.

எங்கள் வேதனைகளை, எங்கள் பசியை, எங்கள் உரிமை பறிப்பு, எங்கள் வாழ்விடங்கள் அபகரிப்பை, எங்கள் வளங்களின் அழிப்பை, வளங்கள் அடாத்தாக திருடப்படுவதையும், எல்லா மட்டங்களிலும் இவ் பிரச்சினைகள் ஆழ வேரூன்றி மக்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களை சொல்ல முடியாது, மற்றும் பகிர முடியாது வாய்கள் மூடப்பட்ட நிலையில் இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.

அபிவிருத்தி என்ற போர்வையில் நாங்கள் அடிமைகளாக்கப்பட்டு வருவதையும், எமது உரிமைகள் மீறப்பட்டு வருவதையும், மனித வாழ்வுக்கு எதிராக மனித சக்தியினால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் பயங்கரமான அடக்குமுறையையும் மற்றும் எமது பழமை வாய்ந்த எங்கள் அடையாளங்களையும் அழிக்கும் செயற்பாடுகளையும் எதிர்த்து நீதி கேட்கும் சந்தர்ப்பங்களை முடக்கும் மற்றும் அழிக்கும், மனிதநேயம் அற்ற அழிவு நிறைந்த செயல்கள் நடைபெறும் காலத்தில் இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.

பிள்ளைகளை இழந்து, பெற்றோரை இழந்து, மனைவியை இழந்து, உடல் அவயங்களை இழந்து, கண்ணீரோடும், கவலையோடும், சுமைகளோடும், வாழும் எம் உறவுகள் மற்றும் தாங்கள் ஒப்படைத்த உறவுகள் மற்றும் எங்களிடம் இருந்து உறவுகளையும் வலுக்கட்டாயமாக பறித்து சென்ற உறவுகளை நினைத்து கண்ணீரோடும், கவலையோடும் வருந்தும் உறவுகளையும் கவலைக்கு உள்ளாக்குவதோடும், அத்துடன் பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அவர்களின் வருகையை எதிர்பார்த்து கவலையுடன் உள்ள உறவுகளுக்கு நீதி கிடைக்காதா? என்னும் கவலையோடும், மற்றும் தங்களின் சொந்த இடத்திற்கு சென்று மீன்டும் வாழ்வினை ஆரம்பிக்க முடியாத நிலையில் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம்.

பயங்கரமான முறையில், மனித மாண்பற்ற முறையில் மனித உரிமைகள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் பறிக்கும் அரசியல்வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலங்களில் தெரிவு செய்தோம்.

சிந்தித்து வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்துமாறு மன்னார் பிரஜைகள் குழு கோரிக்கை | People Mannar The Group Has Requested The Public

எமது வளங்களையும், காணிகளையும் சுரண்டும் மற்றும் விற்க தூண்டும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும், கடந்த காலத்தில் நாம் தெரிவு செய்தோம். எமது பண்பாடுகளையும், மொழிகளையும், சமயங்களையும், மிகவும் பயங்கரமான முறையில் திட்டமிட்டு அழிக்கும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலத்தில் தெரிவு செய்த மக்களாய் இன்றும் இத்தேர்தலை சந்திக்கின்றோம்.

எமது எதிர்கால புராதன வரலாற்றையும், எமக்குரிய வாழ் விடங்களையும், எமது நிரந்தர வாழ்வாதார உழைப்புகளையும் அழிக்கும் மற்றும் துணைபோகும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலத்தில் தெரிவு செய்த மக்களாய் இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.

மக்களின் உயிரை, அடிப்படை உரிமைகளை மதிக்காது மக்களின் வாழ்வுகளை பாதுகாக்காது, திட்டமிட்ட முறையில் மக்கள் மத்தியில் குடும்பங்களில், கிராமங்களில் மற்றும் மாவட்டங்களில் பிளவுகளையும், பிரச்சினைகளை ஏற்படுத்தும் தூய்மையற்ற அரசியல் செய்யும் அரசியல் வாதிகளையும், அரசியல் தலைவர்களையும் கடந்த காலத்தில் தெரிவு செய்த மக்களாய் இன்றும்  தேர்தலை சந்திக்கின்றோம்.

படித்த இளம் சந்ததியினர் வேலைவாய்ப்பு இன்றி இளம் சமுதாயம் சீரழியும் நிலையில் தொழில் முயற்சிகள் அற்ற நிலையில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஈடுபடும் இன்றைய இளம் தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. இவ் நிலை எதிர்கால வாழ்வை மாற்றுமா? என்ற நிலையில் இவ் தேர்தலை சந்திக்கின்றோம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆகையால் தெளிவான சிந்தனையோடு ஆழமாக யோசித்து தங்களின் விருப்புகளின் அடிப்படையில் வாக்குகளை அளிக்க வேண்டும்.

தூய்மையான மற்றும் அமைதியான அரசியல் நாட்டில் நடைபெற வேண்டும். எம் மக்கள் அமைதியுடனும், சம உரிமைகளுடன் வாழ வேண்டும். அடிப்படை தேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சிறந்த தலைவரை உருவாக்க சிந்தித்து, சிறந்த தெளிவுடன் வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்துவோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு

இந்தியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு

 

கொழும்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க ஆதரவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

கொழும்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க ஆதரவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

 


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US