யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (21.12.2022) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை.
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ். மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே ஒருதடவை யாழ் மாநகரின் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் அன்றைய
முதல்வராக இருந்த ஆர்னோல்ட் பதவி இழந்திருந்ததுடன் இன்றைய முதல்வர் மணிவண்ணன்
பதவிக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
நீதா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் போத்தல்., அதன் விலைக்கு ஒரு வீட்டையே வாங்கலாம் News Lankasri