ஒரே ஓடுபாதையில் பயணித்த 2 விமானங்களினால் பதற்றம்
இந்தியாவில் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான வகையில் பயணித்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு விமானம் மற்றொரு விமானம் புறப்பட்ட அதே ஓடுபாதையில் தரையிறங்கிய காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் சனிக்கிழமை (09) அதிகாலையில் இந்தோரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் 6E 5053 ஓடுபாதையில் தரையிறங்கியுள்ளது.
தரையிறங்கும் மற்றும் புறப்படும் நேரத்தில் குழப்பம்
அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் AI657 திருவனந்தபுரம் சர்வதேசத்திற்கு புறப்படும் பணியில் இருந்த நிலையில், விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படுவதற்கான நேரத்தில் குழப்பமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
