2025 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாது: அரசாங்கம் அறிவிப்பு
2025ஆம் நிதியாண்டுக்காக, இலங்கை அரசாங்கத்தினால் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது எனவும் அதற்குப் பதிலாக அடுத்த வருடத்தின் முதல் சில மாதங்களுக்குள் கணக்கு வாக்கெடுப்பு(Vote on Account) சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2025 மார்ச் இறுதி வரைக்கும் இந்த கணக்கு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரவு செலவுத் திட்டம்
தேர்தல் நாட்காட்டியின்படி, தேர்தல் ஆண்டாக காணப்படுகின்றமையினால் இந்த ஆண்டு இறுதியில் தேசிய தேர்தல் நடத்தப்படவுள்ளது.
எனவே, 2025 ஆம் நிதியாண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் இந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கணக்கு வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்ற செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே நிதி இராஜாங்க அமைச்சரின் உறுதிப்பாடு வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam