T20 உலகக் கிண்ணம்: 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
புதிய இணைப்பு
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய உலக கோப்பை T20 தொடரின் நேற்றைய போட்டியில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அணித் தலைவர் ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர்.
Jasprit Bumrah ? Another Wicket!#TeamIndia are on a roll! ? ?
— BCCI (@BCCI) June 9, 2024
Follow The Match ▶️ https://t.co/M81mEjp20F#T20WorldCup | #INDvPAK
? ICC pic.twitter.com/cRGYsggu9L
இதன்போது, கோலி 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் ஆட்டமிழந்ததுடன் ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் நசீம் ஷா மற்றும் ஹரிஷ் ரல்ப் ஆகியயோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இறுதியில் மோசமான துடுப்பாட்டத்தினால் இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது.
இதையடுத்து, 120 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இரண்டாம் இணைப்பு
உலக கோப்பை T20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்ததாடிய இந்திய அணி சார்பில் ரிஷப் பண்ட் (Rishabh Pant) 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
Innings Break!
— BCCI (@BCCI) June 9, 2024
Rishabh Pant scored 4⃣2⃣ as #TeamIndia posted 119 on the board!
Over to our bowlers now! ? ?
Scorecard ▶️ https://t.co/M81mEjp20F#T20WorldCup | #INDvPAK pic.twitter.com/PYFsTAurc0
அத்துடன், பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா (Naseem Shah) மற்றும் ஹாரிஸ் ராஃப் (Haris Rauf) ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு 120 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக கோப்பை டி20 தொடரின் ஏ-பிரிவில் இன்று நடைபெறும் பரபரப்பான லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதும் வாய்ப்பு உள்ளதால், இப்போட்டிகள் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
நடப்பு உலக டி20 தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் நியூயார்க் நகரில் இன்று இரவு மோதுகின்றன. ரோகித் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது.
அமெரிக்க ஆடுகளங்களின் தன்மை குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், போட்டிக்கான வியூகம் அமைப்பதில் அனைத்து அணிகளுமே சற்று தடுமாறுகின்றன.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு பேசிய தலைவர் ரோகித், ‘இந்த புதிய களத்தில் எப்படி ஆடுவது என தெரியவில்லை என்றார் அனுபவ வீரர்களான இந்திய வீரர்கள், களத்தில் நிதானித்து எப்படி விளையாடுவது என்று யோசித்து பந்துகளை எதிர்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களம் என்பது பாபர் அஸம் தலைமையிலான பாக்கிஸ்தான் அணிக்கு சாதகமான அம்சம் ஆகும் முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி சிக்கலில் சிக்கியுள்ளது.
இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் ஆடவுள்ளதால் இன்றைய ஆட்டம் எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது சர்வதேச டி20ல் இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளதில் இந்தியா 9-3 என முன்னிலை வகிக்கிறது. இந்த 12 ஆட்டங்களில் ஒன்று கூட பாகிஸ்தானில் நடைபெறவில்லை.
இந்தியாவில் 2 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. டி20 உலக கோப்பையில் 7 முறை மோதியதிலும் இந்தியா 6-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாகிஸ்தான் வென்ற ஒரு ஆட்டம் 2007ல் சூப்பர் ஓவர் மூலம் கிடைத்தது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3-2 என முன்னிலையில் உள்ளது.
அணி வீரர்கள் பின்வருமாறு.....
இந்தியா: ரோகித் ஷர்மா (c), ஹர்திக் பாண்டியா (vc), அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ்.
பாகிஸ்தான்: பாபர் அஸம் (c), அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, ஆஸம் கான், பகார் ஸமான், ஹரிஸ் ராவுப், இப்திகார் அகமது, இமத் வாசிம், முகமது ஆமிர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயிம் அயூப், ஷதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |