வீதி விபத்தில் இளம் பெண் மரணம்
மொனராகலை - சியம்பலாண்டுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த எத்திமலை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிப்பர் லொறி மோதி காயமடைந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சாரதி பொலிஸாரால் கைது
உயிரிழந்தவர் 39 வயதான தமயந்தி குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மொனராகலையில் இருந்து சியம்பலாண்டுவ நோக்கி தனது உறவினருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, சியம்பலாண்டுவ திசையில் இருந்து வந்த லொறி அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.
லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam