பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி

Narendra Modi India Draupadi Murmu Lok Sabha Election 2024
By Benat Jun 09, 2024 02:13 PM GMT
Report

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி(Narendra Modi) பதவியேற்றுக் கொண்டார். 

ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

வழமையை விட இம்முறை அதிகமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது.

வெளியானது இந்திய அமைச்சரவையின் உத்தேச விபரங்கள்

வெளியானது இந்திய அமைச்சரவையின் உத்தேச விபரங்கள்

    

மோடி தெரிவு

அதேநேரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அத்துடன் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.


பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க இந்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன. இதைத்தொடர்ந்து பா.ஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கூட்டணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பா.ஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி | Prime Minister Narendra Modi Taking Office  

மேலும் பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்து போட்ட கடிதங்களையும், ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று  முர்முவை சந்தித்தார். அத்துடன் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் கோரினார்.

இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி | Prime Minister Narendra Modi Taking Office  

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து மத்திய மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி | Prime Minister Narendra Modi Taking Office 

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தினர்.

இந்த விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிதிஷ் குமாரைக் கண்டதும் மோடி செய்த செயல் : வெளியாகியுள்ள காணொளி

நிதிஷ் குமாரைக் கண்டதும் மோடி செய்த செயல் : வெளியாகியுள்ள காணொளி

பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தும் ஜனநாயக போராளிகள் கட்சி

பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தும் ஜனநாயக போராளிகள் கட்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US