இலங்கையில் கோவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்போது புதிய கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்று
இந்த கோவிட் தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவாகும்.

எனினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம்.
மரணங்கள்
அவ்வாறானவர்களே இதைப் பற்றி கவலைப்பட வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இருவரும் உடல் நிலையில் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களாகும்.

அதனை தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லாததால் தேவையற்ற அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri