நாட்டில் மிக அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா (Gampaha) மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 374 ஆகும்.
அதன்படி, கொழும்பு (Colombo) மாவட்டத்திலிருந்து 304 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 169 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 134 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
கடந்த சில மாதங்களாக நிலவிவந்த சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இவ்வாறு டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளது.

முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 24 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri