இலங்கை மருத்துவத்துறை எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி
இலங்கையில் (Sri Lanka) விசேட மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையொன்று நிலவுவதாக தேசிய கணக்காய்வு நிறுவன அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலையில் விசேட மருத்துவர்களுக்கான 35 துறைகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 972 விசேட மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.
அத்துடன் விசேட மருத்துவ நிபுணர்கள் சேவையின் அனுமதிக்கப்பட்ட 08 துறைகளுக்கான 66 மருத்துவ நிபுணர்களில் ஒருவர்கூட இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.
12 துறைகளில் 113 மேலதிக விசேட நிபுணர்கள்
முறையான அனுமதி பெறப்படாத 12 துறைகளில் 141 விசேட மருத்துவ நிபுணர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக 12 துறைகளில் 113 மேலதிக விசேட நிபுணர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் சேவையின் தேவைப்பாட்டிற்குப் பதிலாக மருத்துவர்களின் விருப்புக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து விசேட மருத்துவ நிபுணர்கள் நியமனம் நடைபெற்றுள்ளதும் தேசிய கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
