கொழும்பில் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு
கொழும்பின் (Colombo) சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த நீர் வெட்டானது நாளை(16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள்(17) காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்றைய தினம்(15.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்
இதன்படி, கொழும்பு 12 புதுக்கடை, 13 கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, 14 கிரேன்பாஸ், 15 மட்டக்குளி, மோதரை, மாதம்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam