16 தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்து பா.ஜ.க தலைவர் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்றொழிலாளர்களை மீட்க உதவி செய்யுமாறு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை நேற்றைய தினம் (12.03.2023) ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று அண்ணாமலை கோரியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இந்த 16 கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை அதிகாரிகளால், இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சுமத்தியிருந்தது.
தமது கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை, பிரயோகிக்கப்படாமல் இருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தை
வலியுறுத்தியிருந்தது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
