யாழ்.கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களே இன்று (12.03.2023) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை
இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டவுடன் இவர்களுடைய இரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு 12 கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri