ஏமன் மோதல்களில் ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமான வீரர்கள் பலி
ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின் மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத காலத்தில் மாத்திரம் இருதரப்பையும் சேர்ந்த 1,500 க்கும் அதிகமான போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் 9 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில், அரசாங்க ஆதரவு தேசிய எதிர்ப்புப் படையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக அல்ஜும்ஹூரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
1,500க்கும் வீரர்கள் பலி
இதேவேளை, இதே காலப்பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இச்சேத விபரங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் உள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றும் நோக்கில் ஹூதிகள் முன்னேறி வரும் நிலையில், அங்கு தொடர்ந்தும் தீவிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.