ஓரணியில் திரண்ட தமிழர்கள்! செம்மணி பிரகடனம் வெளியீடு

Sri Lankan Tamils Tamils chemmani mass graves jaffna
By Erimalai Sep 13, 2026 04:33 PM GMT
Report

தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொது மக்களும் நல்லூர் கிட்டு பூங்காவில் 13 சரம்பர் 2026 அன்று ஓரணியில் திரண்டு செம்மணி பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களான வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி ஒற்றுமையாக நாம் ஒன்றுபட்டு இங்கு கூடி கீழ்வரும் பிரகடனங்களை வெளியிடுகின்றோம்.

செம்மணி

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும்.

செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.

இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.

ஓரணியில் திரண்ட தமிழர்கள்! செம்மணி பிரகடனம் வெளியீடு | Chemmani Mass Graves In Srilanka

எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும். தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச குற்றவியில் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம் முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்படவும் வேண்டும். அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.

ஓரணியில் திரண்ட தமிழர்கள்! செம்மணி பிரகடனம் வெளியீடு | Chemmani Mass Graves In Srilanka

வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும். அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் தொன்மையான வரலாறு. கலை. பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார திணைக்களம், வனவள, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும் நிறுத்தப்படவும் வேண்டும். தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் - சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை

ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை

சவூதி எண்ணெய் குழாய்த் தொடர் முடக்கம்: உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறையும் அபாயம்

சவூதி எண்ணெய் குழாய்த் தொடர் முடக்கம்: உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறையும் அபாயம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US