ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை
கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.
மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.
சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்