அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி
15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான அறிவித்தல்
அதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, சாலைகள், நீர், உணவு, மாவட்ட செயலக அலுவலகங்கள், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கள அதிகாரிகள், ஆம்புலன்ஸ்கள், மத்திய வங்கி, அரச வங்கிகள் மற்றும் காப்பீட்டு சேவைகள், நீர்ப்பாசன வழித்தடங்கள், தொலைபேசிகள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகங்கள், தாழ்வான நில மீட்பு, விவசாயம் மற்றும் விவசாய காப்பீட்டு சேவைகள் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பேரிடர் சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளைப் பராமரிக்கும் நோக்கில் நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார்.
டித்வா சூறாவளிக்குப் பிறகு ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு தொடர்புடைய சேவைகள் மேலும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan