அரசாங்கத்திற்கு விடுத்திருந்த காலக்கெடு நிறைவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசுக்கு விடுத்திருந்த காலக்கெடு இன்று (31) காலை 8.30 மணியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாசா தெரிவித்துள்ளார்.
இந்த காலக்கெடுவுக்குள் சாதகமானதும் பொறுப்பானதுமான பதில் கிடைக்காவிட்டால், இன்று அவசர நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே ஐந்து முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் அவர் எச்சரித்துள்ளார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள்ச ங்கம் கடந்த திங்கட்கிழமை (26) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கியது.
குறிப்பாக, வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் கிடைக்காத மருந்துகளுக்கான பரிந்துரைகளை வழங்காமல் இருக்க மருத்துவர்கள் தீர்மானித்திருப்பதும் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில் உள்ளடங்குகின்றது.
இம்மருந்துகள் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என குறிப்பிட்டுள்ளது.
இதனால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டால் அதன் முழுப் பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam