136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி மன்னாரில் நினைவூட்டல் நிகழ்வு
மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றையதினம்(15.07.2026) காலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.
தொல்லியல் பாதுகாப்பு
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.


மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri