கம்பஹாவில் இடம்பெற்ற விபத்து! 19 வயது இளைஞர் மரணம்
கம்பஹா, வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(14.072026) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
பியகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, மற்றுமொரு முச்சக்கர வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து அருகில் வந்த கார் ஒன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியான கடுவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர், மீட்கப்பட்டு உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காரின் சாரதியும் காயமடைந்த நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய மற்றுமொரு முச்சக்கர வண்டியின் சாரதி, வெலிவேரியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெலிவேரியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri