முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகெட்டியாவைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபர் அவரிடமிருந்து 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்கவை கைது செய்துள்ளனர்.

58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றையதினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan