டெங்கு தொற்று குறித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் மூலம் இந்த நிலைமைக்கு முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூலை மாதத்தின் முதலாவது வாரம் நிறைவடையும் போது 142 ஆக காணப்பட்ட அதி அபாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை, தற்போது 175 ஆக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, குறிப்பிட்டுள்ளார்.
வருடத்தின் முதல் 6 மாதங்களில்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வது ஒரு 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க முறையான திட்டமிடல்கள் எதனையும் தற்போது காண முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பாக கீழ்நிலை தீர்மானங்களை எடுக்கும் வேகம் போதாது எனவும், குறைந்தபட்சம் இது தொடர்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றாவது உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலைமை இதே போன்று தொடருமானால், 2017 ஆம் ஆண்டில் நாம் கண்ட பாரிய பேரழிவை மீண்டும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 32 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் மாத்திரம் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது டெங்கு தீவிர தொற்றுநோய் நிலைமை ஏற்படுவதற்கான ஒரு முன்கூட்டிய அறிகுறியாகும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan