பதவி விலகலை அறிவித்த மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகல் குறித்த கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம், சரத் அபேகோன் சமர்ப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்கள்
அத்துடன், ஜனாதிபதி இந்த பதவி விலகலை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என இது தொடர்பாக பேராசிரியர் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களினாலேயே தான் இந்த பதவி விலகல் முடிவை எடுத்ததாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன் முன்னதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண ஆளுநர் செயலாளர் பதவியும் வெற்றிடம் இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகிறது.
இப்பதவியை வகித்து வந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றமையே இதற்கு காரணமாகும். இதனையடுத்து, குறித்த பதவியின் பொறுப்புக்களை தற்காலிகமாக முன்னெடுப்பதற்காக மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri