சுரேஷ் சலேவிற்கு எதிரான நீதிமன்றத்தின் இரகசிய அறிக்கை கோட்டாபயவிடம் - கலக்கத்தில் சிஐடி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறை தலைவர் சுரேஷ் சலே தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தீவிரமடைந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பிற தரப்பினர் என பலரும் சிறைச்சாலை விகாரத்தை மாத்திரமே நோக்கி செயற்பட்டு வருவதாக தெரிகின்றது.
இந்நிலையில், சுரேஷ் சலே குறித்த விசாரணைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பற்றி மறந்து விட்டதா என கேள்வி எழுப்ப்பட்டு வருகின்றன.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மறைக்க சிறைச்சாலை விவகாரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri